வார இறுதியில் 1000 தொற்றாளர்கள் - ஓமான் சுகாதார அமைச்சு
கடந்த வார இறுதியில் 1000 புதிய கொவிட் தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர் என்று ஓமான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை 343 தொற்றாளர்களும் வௌ்ளிக்கிழமை 251 தொற்றாளர்களும் 373 பேருக்கும் அதிகமானவர்கள் சனிக்கிழமையும் அடையாளங்காணப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
கொவிட் தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும் இதுவரை ஓமானில் 4,118 பேர் உயிரிழந்துள்ளனர் 307,722 பேர் தொற்றுக்குள்ளாகி இதுவரை 300,964 பேர் குணமடைந்துள்னளர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.