உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொவிட் 19 புதிய திரிபு வைரஸான ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளான பலர் பல நாடுகளில் நேற்று 28) அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
நெதர்லாந்தில் 13 பேரும் அவுஸ்திரேலியாவில் இருவரும் கண்டறியப்பட்டுள்ளனர் என்றும் பல நாடுகள் தமது நாடுகளின் எல்லைகளை மூடியுள்ளன என்றும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நெதர்லாந்து தலைநகர் அம்ஸ்டேர்டமிற்கு தென் ஆப்பிரிக்காவிற்கு கடந்த வௌ்ளிக்கிழமை வருகைத் தந்த விமான பயணிகள் 13 பேருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
புதிய திரிபு வைரஸான ஒமிக்ரோன் பரவல் குறித்து கருத்து வௌியிட்டுள்ள உலக சுகாதார தாபனம், இது தடுப்பூசிகளுக்களுக்கு எதிராக செயற்படக்கூடும் என்றும் அதனால் கொவிட் பரவல் மேலும் இரு ஆண்டுகளுமக்கு நீடிக்கக்கூடும் என்று கவலை வௌியிட்டிருந்தது. எனினும் இது குறித்த ஆராய்ச்சி முடிவுகள் இன்னும் வௌியாகவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
முதல்முறையாக தென் ஆப்பிரிக்காவில் அடையாளங்காணப்பட்ட ஒமிக்ரோன் வைரஸானது பின்னர் பிரித்தானியா, ஜெர்மனி, டென்மார்க், பெல்ஜியம், பொட்ஸ்வானா, இஸ்ரேல் மற்றும் ஹொங்கொங் ஆகிய நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டது.
நியுஸிலாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பயணிகள் வருவதை தடை செய்துள்ளது.