வெளிநாடுகளிலிருந்து கட்டார் திரும்புவதற்கான விதிமுறைகளில் மாற்றம்!

வெளிநாடுகளிலிருந்து கட்டார் திரும்புவதற்கான விதிமுறைகளில் மாற்றம்!

வெளிநாடுகளிலிருந்து கட்டாருக்கு திரும்புவதற்கான விதிமுறைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கட்டார் பொது சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸின் புதிய திரிபு தென்னாபிரிக்காவிலிருந்து பரவ ஆரம்பித்துள்ள நிலையில், கட்டாரும் கட்டார் திரும்புவதற்கான விதிமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புதிய நடைமுறைகள் விரைவாக நடைமுறைக்கு வரும் என்பதாக கட்டார் சுகாதார அமைச்சு தனது உத்தியோக பூர்வ ட்விட்டர் தளத்தின் மூலம் தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா தாக்கம் அடிப்படையில், பச்சைப் பட்டியல் நாடுகள், மஞ்சல் பட்டியல் நாடுகள், சிவப்பு பட்டியல் நாடுகள் ஆகியவற்றிலும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சிவப்பு பட்டியலில் இருந்து விதிவிலக்கான நாடுகளின் எண்ணிக்கையை 15 ஆக அதிகரித்துள்ளது.

1. பங்களாதேஷ்
2. பொத்துவானா
3. எகிப்து
4. எஸ்வட்னி
5. இந்தியா
6. லெஸிதோ
7. நமீபியா
8. நேபாளம்
9. பாகிஸ்தான்
10. பிலிப்பைன்ஸ்
11. இலங்கை
12. தென்னாபிரிக்கா
13. தென்சூடான்
14. சூடான்
15. சிம்பாப்வே

ஒவ்வொரு பட்டியல் நாடுகளிலிருந்து பயணிக்க வௌ;வேறான தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்பதாக கட்டார் பொது சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம் - கத்தார் தமிழ்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image