குவைத்தில் விமான டிக்கட்டுகள் விலையில் வீழ்ச்சி

குவைத்தில் விமான டிக்கட்டுகள் விலையில் வீழ்ச்சி

குவைத்தில் சர்வதேச விமான சேவை மீள ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதமாகியுள்ள நிலையில் பிறநாடுகளுக்கான விமான டிக்கட்டுக்களின் விலை குறைவடைந்துள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சில வௌிநாடுகளுக்கான விமான டிக்கட்டுக்களின் விலை 50-200% குறைந்துள்ளது என்று குவைத் செய்தி நிறுவனமான குனாவிற்கு வழங்கிய செவ்வியில் அந்நிபுணர்கள் கருத்து வௌியிட்டுள்ளனர்.

கொவிட் 19 கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் ஒரு கட்டமாக விமான செயற்பாடுகளை முழுமையாக ஆரம்பித்த குவைத், அதன் தேசிய விமான சேவையான குவைத் எயார்வேஸின் சர்வதேச விமான சேவைகளையும் அதிகரித்தது.

கோவிட்-19 தொடர்பான கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் ஒரு பகுதியாக விமான நிலையம் முழு செயல்பாட்டுக்கு திரும்பியுள்ளது, தேசிய விமான நிறுவனமான குவைத் ஏர்வேஸ் அதன் வெளிநாட்டு விமானங்களை அதிகரிக்க தூண்டியுள்ளது.

பயண நிபுணரான கமல் கப்ஷாவின் கருத்தின்படி கூற்றுப்படி, விமான டிக்கெட்டுகளின் விலைகள், குறிப்பாக குவைத்தில் இருந்து பயணிக்கும் விமானங்களின் டிக்கட்டுக்கள் சுமார் 200 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளன.

துருக்கி, எகிப்து, பாரீஸ் மற்றும் முனிச் போன்ற நாடுகளுக்கும் நகரங்களுக்குமான விமான டிக்கட்டுக்களின் விலை 50 வீதத்தினால் குறைவடைந்துள்ளன என்கிறார் பயண முகவர் அதிகாரியான நஸீப் அட்மன்.

எவ்வாறு இருப்பினும் டுபாய், லண்டன், பிலிப்பைன் மற்றும் ஜெத்தா ஆகிய இடங்களுக்கான டிக்கட்டுக்களின் கேள்வி காரணமாக இன்னும் அதிகமாகவே காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மாத்திரம் கொவிட் 19 கட்டுப்பாடுகளை தளர்த்த குவைத அரச கடந்த மாதம் தீர்மானித்து.

சுமார் 7 மாதங்களுக்குப் பின்னர் திகதி கடந்த ஓகஸ்ட் மாதம் முதலாம் தி இரு தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்ட வெளிநாட்டவர்களுக்காக விமான நிலையத்தை திறக்க அந்நாட்டு அரசு தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image