வௌிநாட்டுப் பயணிகளுக்கு புதிய நடைமுறை

வௌிநாட்டுப் பயணிகளுக்கு புதிய நடைமுறை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று முதல் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டிருந்து வருகை தரும் பயணிகள் 20 வினாடிகளுக்குள் விமான நிலையத்தை விட்டு வெளியேறுவதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விமானநிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று (26) முதல் காகிதம் அல்லது ஏனைய உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் சேவையை இணையதளம் மூலமாக பெற்றுக்கொள்ள முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்று தொடக்கம் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடையும் வௌிநாட்டுப் பயணிகள் airport.lk இணையதளத்தின் ஊடாக அல்லது QR குறியீட்டினூடாக தகவல்களை சமர்ப்பிப்பதனூடாக பயணிகள் தமது சேவையை விரைவுபடுத்திக்கொள்ள முடியும். இவ்விணையதளத்தினூடாக பயணிகள் 72 மணித்தியாளத்திற்கு முன்னர் பெறப்பட்ட பிசிஆர் பரிசோதனை அறிக்கை, தடப்பூசி செலுத்திக்கொண்டதற்கான அட்டை என்பவற்றை சமர்ப்பிக்க முடியும். இதனூடாக பயணிகள் தேவையில்லாத காத்திருப்புக்களை மேற்கொள்ளத் தேவையில்லை என்றும் விமானநிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image