ஜப்பானில் தொழில்வாய்ப்பை நாடி செல்ல விரும்பும் இளைஞர் யுவதிகளுக்கான வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்க இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் முன்வந்துள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 27ம் திகதி IM Japan நிறுவனத்தின் இலங்கைக்கான முகாமையாளர் எச். கவஹாரா ஜப்பான் வேலைவாய்ப்பு தொடர்பில் Zoom மற்றும் Facebook live ஊடாக விளக்கமளிக்கவுள்ளார்.
எதிர்வரும் புதன் கிழமை (27) அன்று இலங்கை நேரப்படி மாலை 2.00 மணி தொடக்கம் 3.30 மணி வரை நடைபெறவுள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள Zoom Link ஊடாக இணைந்துகொள்ள முடியும்.
Zoom Link -
https://zoom.us/j/93240212178...
Zoom Meeting ID: 932 4021 2178
Passcode: 306682
மேலதிக தகவல்களை 0112 789 367 என்ற தொலைபேசியில் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.