விமானநிலையத்தில் மீண்டும் இயங்கும் பிசிஆர் பரிசோதனைக்கூடம்

விமானநிலையத்தில் மீண்டும் இயங்கும் பிசிஆர் பரிசோதனைக்கூடம்

கட்டுநாயக்க விமானநிலையத்தில் தற்காலிகமாக மூடப்பட்டிருந்து பிசிஆர் மருத்துவ ஆய்வுகூடம் இன்று (27) அதிகாலை 4.30 மணி தொடக்கம் மீள இயங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வௌிநாடுகளில் இருந்து விமானநிலையத்திற்கு வருகைத் தருபவர்கள் மற்றும் வௌியேறுபவர்களுக்கு இன்று காலை முதல் எ.எ.எஸ்.எல் ஹொஸ்பினோம் மருத்துவ ஆய்வுகூடத்தில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்று அவ்வாய்வுகூடத்தின் முகாமையாளர் சுமுது சரசிஜா தெரிவித்துள்ளார்.

முழுமையாக தடுப்பூசி செய்துக்கொண்டவர்கள், ஒரு தடுப்பூசி மாத்திரம் செலுத்திக்கொண்டவர்கள் மற்றும் இலங்கைக்கு வரும் மற்றும் இலங்கையில் இருந்து செல்லும் பயணிகள் என அனைவருக்கும் இவ்வாய்வுகூடத்தில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள முடியும். பரிசோதனைக்கு 40 அமெரிக்க டொலர் அறவிடப்படுவதுன் பரிசோதனை முடிவுகள் 3 மணித்தியாலத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் முழுமையான அனுமதியுடன் இம்முறை ஆய்வுகூடம் திறக்கப்பட்டுள்ளதுடன் திறமையும் அனுபவமும் வாய்ந்த ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். மருத்துவ ஆய்வுகூடம் மற்றும் ஓய்வு அறை என இரு பகுதிகளாக இயங்கிறது.

இன்று அதிகாலை 2.15 மணியளவில் கட்டாரில் இருந்த கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்த கட்டார் விமானசேவைக்கு சொந்தமான QR- 668 விமானத்தில் வருகைத் தந்த பயணிகள் பிசிஆர் பரிசோதனைக்காக வந்திருந்தனர் என்றும் ஆய்வுகூட முகாமையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image