மத்திய கிழக்கு நாடுகள் சிலவற்றில் கொவிட் 19 தொற்று வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று உலக சுகாதார தாபனம் எச்சரித்துள்ளது.
தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு, டெல்டா திரிபு வைரஸ் பரவல் மற்றும் தடுப்பூசி வழங்குதிலில் உள்ள தாமதம் போன்ற காரணங்களால் இவ்வபாயம் தோன்றியுள்ளது என்று உலக சுகாதார தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.
உலக சுகாதார தாபன கிழக்கு வலயத்தில் கடந் 8 வாரங்களாக தொற்று மற்றும் மரண எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில் மீண்டும் தற்போது அதிகரித்து வருவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது என்று உலக சுகாதார தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதற்கமைய, லிபியா, ஈரான், ஈராக், டியுனிஷியா ஆகிய நாடுகளில் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் மிக வேகமாக அதிகரித்து வருவதாகவும் லெபனான், மொரோக்கோ ஆகிய நாடுகளில் தொற்று, உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் சுட்டக்காட்டப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் முஸ்லிம்கள் ஹஜ் பெருநாளை கொண்டாடவுள்ள நிலையில் தொற்று வேகமாக பரவும் அபாயம் தோன்றியுள்ளது என்றும் உலக சுகாதார தாபனம் கவலை வௌியிட்டுள்ளது.