இலங்கைக்கான வேலைவாய்ப்பு அனுமதிப்பத்திரம் வழங்க தற்காலிக தடை- பஹ்ரைன்

இலங்கைக்கான வேலைவாய்ப்பு அனுமதிப்பத்திரம் வழங்க தற்காலிக தடை- பஹ்ரைன்

இலங்கை உட்பட 5 நாடுகளுக்கான வேலைவாய்ப்புகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் செயற்பாடு நிறுத்தப்பட்டுள்ளதாக பஹ்ரைன் அறிவித்துள்ளது.

கொவிட் 19 பரவலை தடுப்பு நடவடிக்கையில் ஒரு கட்டமாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பஹ்ரைன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அந்நாட்டு கொவிட் 19 தடுப்பு செயலணியினால் சிவப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட்ட நாடுகளுக்கே இவ்வாறு வேலைவாய்ப்பு அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு வேலைவாய்ப்பு அனுமதிப்பத்திரம் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே இலங்கை உட்பட குறித்த சிவப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட்ட நாடுகளில் இருந்து பயணிகள் விமானம் பஹ்ரைன் வருவதற்கான தடை கடந்த 24ம் திகதி விதிக்கப்பட்டிருந்தது.

இத்தடை தமது நாட்டு மக்களுக்கு செல்லுபடியாகாது என்று சுட்டிக்காட்டியுள்ள பஹ்ரைன் எதிர்வரும் 25 திகதி வரை இத்தடை நீடிப்பதற்கு அந்நாட்டு மருத்துவக்குழு பரிந்துரை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image