கொரிய தொழில்வாய்ப்புக்கு செல்லமுடியாமல் காத்திருக்கும் 3,500 பேர்

கொரிய தொழில்வாய்ப்புக்கு செல்லமுடியாமல் காத்திருக்கும் 3,500 பேர்

2018 ஆம் ஆண்டு கொரியாவுக்கான தொழில்வாய்ப்புக்கு தெரிவான 3,500 இற்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள், தொழில்வாய்ப்புக்காக அந்த நாட்டுக்கு செல்ல முடியாமல் இலங்கையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரிய தொழில்வாய்ப்பு பரீட்சைக்காக தோற்றிஇ கொரிய தொழில்வாய்ப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளபோதிலும், தாங்கள் தொழில்வாய்ப்புக்காக செல்வதற்கு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால், இதுவரையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனத் சம்பந்தப்பட்ட நபர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தங்களின் விஸா காலம் முடிவடைந்தால், தாங்கள் பாரிய அசௌகரியத்தை எதிர்நோக்க நேரிடும் என்றும் தொழில்வாய்ப்புக்காக காத்திருக்கும் சிலர் தெரிவித்துள்ளனர்.

Author’s Posts