பிரித்தானியா செல்ல இனி அனுமதி கிடையாது - ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

பிரித்தானியா செல்ல இனி அனுமதி கிடையாது - ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

பிரித்தானிய குடிமக்கள், குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் தற்போது அங்கு வசிக்கும் இலங்கையர்களை தவிர வேறெவருக்கும் பிரித்தானியா செல்வதற்கு 8ம் திகதிக்குப் பின்னர் அனுமதிக்கப்பட மாட்டாது என்று ஶ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஐக்கிய இராச்சியத்தின் சிவப்பு பட்டியல் நாடுகளில் இலங்கை சேர்க்கப்படவுள்ளதால் இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறு இருப்பினும் நாளை (07) வரை லண்டனுக்கு முன்பதிவு செய்யப்பட்டவர்களுக்கு இந்த தடை செல்லுபடியாகாது.

அவ்வாறு செல்கிறவர்கள் 72 மணித்தியாலத்திற்குள் எடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் எதிர்மறையான முடிவை பெற்றிருக்க வேண்டும். மேலும் தனிமைப்படுத்தலுக்கான அங்கீகாரம் பெற்ற ஹோட்டல் ஒன்றில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் ஈடுபடுவதற்கான முன்பதிவு செய்யப்பட்டிருப்பது கட்டாயமானாதாகும். பயணிகள் லொகேடர் படிவத்தில் எங்கே தனிமைப்படுத்தப்படுவார்கள், 2ம் நாள் மற்றும் 8ம் நாள் பிசிஆர் பரிசோதனை உள்ளிட்ட விபரங்களை உள்ளடக்க வேண்டும்.

லண்டனில் தனிமைப்படுத்தலுக்கான ஹோட்டல் 2ம் நாள் மற்றும் 8ம் நாள் பிசிஆர் பரிசோதனை என்பவற்றை https://www.gov.uk/guidance/booking-and-staying-in-a-quarantine-hotel-when-you-arrive-in-england என்ற இணையதள முகவரியில் பிரவேசித்து பதிவு செய்ய முடியும்.

லொகேடர் படிவத்தை https://www.gov.uk/provide-journey-contact-details-before-travel-uk என்ற முகவரியில் பிரவேசித்து பெற்றுக்கொள்ள முடியும்.

மேலதிக விபரங்களுக்கு தமது முகவர் நிலையம், அருகிலுள்ள ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அலுவலகம் அல்லது எயார்லைன்ஸ் குளோபர் சென்ரரை +94117771979 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.

 

 

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image