சவுதியில் காரணமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பெண்கள்

சவுதியில் காரணமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பெண்கள்

காரணமின்றி 41 இலங்கைப் பெண்கள் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பணிப்பெண்களாக சென்றவர்கள் என்று சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

கடந்த 18 மாதங்களாக அவர்கள் தடுப்பு முகாமில் தடுத்து வைத்துள்ளனர் என்று சர்வதேச மன்னிப்புச்சபை வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பெண்களுக்கு எதிராக இதுவரை எவ்வித முறைப்பாடுகளும் இதுவரையில் பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர்கள் தடுத்து வைத்துள்ளமைக்கான காரணம் இதுவரையில் சட்டரீதியாக அறிவிக்கப்படவில்லையென்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்பெண்களில் மூவருக்கு குழந்தைகள் உள்ளனர் என்றும் அவர்களை விரைவில் நாட்டுக்கு அழைப்பிப்பதற்கான நடவடிக்கையை இலங்கை அதிகாரிகள் முன்னெடுக்கவேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image