வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை நாட்டுக்குள் மீண்டும் முகாமைத்துவம் செய்வது தொடர்பில் மீள்பரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், தொற்று விஞ்ஞான பிரிவின் தலைவர் வைத்தியர் சுதத் சமரவீர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
வெளிநாடுகளில் இருந்து வருபவர்களில் அடையாளம் காணப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கின்றது.
ஏப்ரல் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 3,480 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களை 538 பேர் ஆதாவது 15.5மூ ஆனோர் வெளிநாடுகளிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்களாவர். மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவில் இருந்து வந்தவர்கள் அவர்களில் அடங்குகின்றனர்.
இந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை ஏதாவது ஒரு வகையில் வரையறைக்கு உட்படுத்தல் அல்லது கட்டுப்படுத்தல், அவர்களின் தனிமைப்படுத்தல்களை கட்டாயமாக்குதல் போன்ற நடவடிக்கைகளை செய்ய வேண்டி ஏற்படும். இது குறித்த மீளாய்வு செய்ய வேண்டிய நிலை ஏற்;பட்டுள்ளதாக தொற்று விஞ்ஞான பிரிவின் தலைவர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்