பிரான்ஸில் நாளாந்த கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு!

பிரான்ஸில் நாளாந்த கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு!

ஐரோப்பாவில் நாளாந்த கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன் மிக அதிகமான நோயாளர்கள் பிரான்ஸில் அடையாளங்காணப்பட்டுள்ளனர் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று (28) மாத்திரம் பிரான்ஸில் 1, 79, 807 தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

பண்டிகைக் காலம் என்பதால் ஒமிக்ரோன் தொற்று மிக வேகமாக பரவி வருகின்றமையினால் தொற்றாளர்கள் எண்ணிக்கை வேகமாக பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஒமிக்ரோன் தொற்றினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 30 வீதத்தில் இருந்து 70 வீதமாக அதிகரித்துள்ளதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் ஜனவரி மாத தொடக்கத்தில் நாளாந்த கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 250,000 ஆக அதிகரிக்கக்கூடும் என்று அந்நாட்டின் பிரதமர் எச்சரித்துள்ளார்.

இதனால் பிரான்ஸ் சுகாதார துறையில் வீழ்ச்சி ஏற்படும் என்று உலக சுகாதார தாபனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image