அவுஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் ஒமிக்ரோன் பரவல் அதிகரித்துள்ளதுடன் சுமார் 10,000 பேர் வரை ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நியு சவுத் வேல்ஸ், விக்டோரியா, குவின்ஸ்லாந்து ஆகிய மாநிலங்களிலேயே தொற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலியாவில் ஒமிக்ரோன் தொற்று வேகமாக அதிகரித்து வருகின்றமையினால் அந்நாட்டு பொருளியில் மீட்புத் திட்டங்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் மாநில அரசாங்கங்கள், உள்நாட்டு எல்லைக் கட்டுப்பாடுகளை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன என்றும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒமிக்ரோன் தொற்று காரணமாக இதுவரை அந்நாட்டில் 5 மரணங்கள் பதிவாகியுள்ளன.
கொவிட் 19 கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டு வழமைக்கு திரும்ப திட்டமிட்டுருந்த நிலையில் ஒமிக்ரோன் பரவல் அந்நாட்டை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே மீண்டும்
தனிமைப்படுத்துதல், முகக்கவசம் அணிதல், நோய்த்தொற்றுப் பரிசோதனைகளைத் துரிதப்படுத்துதல் போன்ற சுகாதார பாதுகாப்பு செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலிய சனத்தொகையில் 90 வீதமானவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.