165,000 நிரந்தர வதிவிட வீசாக்களை வழங்க நியூசிலாந்து தீ்ர்மானம்
புலம்பெயர் தொழிலாளர்களுக்கான நிரந்தர வதிவிட வீசா வழங்க தீர்மானித்துள்ளதாக நியுசிலாந்து அறிவித்துள்ளது.
பயிற்சி பெற்ற புலம்பெயர் தொழிலாளர்களை இழக்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில் அதற்கு தீர்வாக 165,000 நிரந்தர வதிவிட வீசாக்களை வழங்க நியுசிலாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக வீசா வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பல பயிற்சி பெற்ற புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டை விட்டு வௌியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வாக இப்புதிய நடைமுறையை அந்நாட்டு அதிகாரிகள் அறிமுகப்படுத்தியுள்ளது.
இப்புதிய நடைமுறை காரணமாக பல புலம்பெயர் தொழிலாளர்கள் மிக இலகுவாக நியுசிலாந்து குடிமக்களாகும் வாய்ப்பினை பெற்றுள்ளனர். குறிப்பாக சுகாதாரத்துறையில் பணியாற்றும் பல புலம்பெயர் ஊழியர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. அவர்களுடைய ஒரு வருடத்திற்குள் அனுமதிக்க அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்நடவடிக்கையானது எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.