இதுவரை விதிக்கப்பட்டிருந்த வீசா கட்டுப்பாடுகளை நீக்க குவைத் தீர்மானித்துள்ளது.
குவைத் அவசர நிலை குழுவின் தீர்மானத்திற்கமைய இவ்வீசா தடைகள் நீக்கப்பட்டுள்ளன என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதற்கமைய, வணிக வருகைக்கான வீசாக்களை வழங்குவதுடன், பண்ணைகள், உணவகங்கள், உணவுத் தொழில், பேக்கரிகள் மற்றும் மீன்வளத் துறைகளில் வேலை அனுமதி ஆகியவை இதில் அடங்கும்.
குவைத்தில் தற்போது தொற்றுநிலை குறைவடைந்து வருவதனை கவனத்திற்கொண்டு இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என்று அவசர நிலை குழுவின் தலைவர் ஷேக் ஹமாத் ஜாபிர் அலி, தெரிவித்தள்ளார்.
தடுப்பூசி பெற்றுக்கொள்ளல் உட்பட அந்நாட்டு அமைச்சவையினால் அனுமதிக்கப்பட்ட சுகாதார நடவடிக்கைகளுக்கு அமைவாக செயற்படுபவர்களுக்கே வீசா அனுமதி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.