உண்மையான தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகமாகலாம்- PHI

உண்மையான தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகமாகலாம்- PHI

உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள எண்ணிக்கை விடவும் உண்மையான தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம். பொதுமக்கள் வைரஸ் பரவியுள்ளமை குறித்த தௌிவான விபரங்கள் அறியாமல் இருக்கக்கூடும் என்று பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கைக்கும் களத்தில் நாம் காணும் தொற்றாளரின் எண்ணிக்கைக்கும் இடையே வித்தியாசங்கள் காணப்படுகின்றன என்று நேற்று சங்கத்தின் தலைவர் எம்.ஜி உபுல் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.

நோயாளிகளின் எண்ணிக்கையில் முரண்பாடுகள் இருப்பதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) ஏற்கனவே சசுட்டிக்காட்டியிருந்தது. GMOA துணைச் செயலாளர் டாக்டர் நவீன் டி சொய்சா, உத்தியோகபூர்வ ஆதாரங்களில் மருத்துவமனைத் திறன்களில் உள்ள முரண்பாடுகள் மற்றும் அந்தந்த மருத்துவமனைகளில் மருத்துவ ஊழியர்கள் தினமும் சந்திக்கும் எண்ணிக்கைகள் ஆகியவை சுகாதாரத் தொழிலாளர்கள் வழங்கிய தகவல்களில் நம்பிக்கையை இழக்கச் செய்கின்றன என்று கூறினார்.

மருத்துவமனைகளின் திறன்கள் குறித்து வௌியாகும் தகவல்களிலும் முரண்பாடுகள் காணப்படுகின்றன. இவை பொதுமக்களை சென்றடையவில்லை. ஆனால் சுகாதாரத்துறைக்கு குறித்த தகவல்கள் வௌியாகியுள்ளன. மருத்துவமனை வட்டாரங்கள் அந்தந்த மருத்துவமனைகளில் உள்ள எண்ணிக்கையை அறிவர். உத்தியோகப்பூர்வமாக வௌியாகும் தகவல்களில் உண்மையான எண்ணிக்கையை உள்ளடக்கப்படாதபோது தகவல்களின் மீதான நம்பிக்கை இழக்கப்படுகிறது.

இது தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் சிரேஷ்டய தொற்றுயிலாளர் டொக்டர் சுதத் சமரவீர கருத்து தெரிவிக்கையில், பெறப்பட்ட தகவல்களில் தௌிவான தகவல்களை வௌியிடும் போது நிருவாக தரவு முறையில் தௌிவற்ற தகவல்கள் ஒதுக்கப்படப்படும் ​போது எண்ணிக்கையில் வித்தியாசங்கள் தோன்றக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரே பரிசோதனை முடிவகள் பல தடவைகள் அனுப்பப்படும் போது பல மடங்கு அதிகரித்து காணப்படும். அவற்றை தரவு முறையானது வௌியிடும் போது அகற்றும். அத்தரவு முறையானது உள்ளக தேவைக்காக பயன்படுத்தப்படுத்தப்படுகிறது. அது சரியான தகவல்களை காட்டாது. எனவே எண்ணிக்கையில் மாற்றங்கள் ஏற்படக்கூடும்.

பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் வௌியிட்டுள்ள முரண்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்த டொக்டர் சுதத், பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் ஒருவர் அடையாளங்காணப்பட்டால் அவரைச் சார்ந்த பிற பிரதேசங்களில் உள்ளவர்களையு சுகாதார அமைச்சு அடையாளக்காணும். உதாரணமாக அடையாளங்காணப்பட்டவரின் பணியிட பிரதேசங்கள் அடையாளங்காணப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

த மோர்னிங்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image