சரியான தீர்மானம் எடுக்கப்படாவின் நாடு முழுவதும் தொற்று பரவும் அபாயம்
நாட்டில் அடையாளங்காணப்பட்டுள்ள புதிய திரிபடைந்த கொரோனா வைரஸ் தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருப்பது மிகவும் அவசியம் என்று பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
புதிய திரிபடைந்த கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மக்களின் பொறுப்பின்மையே இதற்கு பிரதான காரணம்.
நோயாளிகள் மற்றும் இறப்புகளின் தினசரி அறிக்கைகளுக்கு இடையில் ஒரு முரண்பாடுகள் காணப்படுகின்றன. பதிவான தொற்று மற்றும் மரணம் தொடர்பில் மக்களுக்கு சரியான தகவல்கள் வழங்கப்படாவிடின் அதன் விளைவுகளை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்.
இங்கிலாந்தில் பரவும் குறித்த வைரஸ் தற்போது இலங்கையில் அடையாளங்காணப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் சரியான முடிவுகள் எடுக்கப்படாவிடின் நாடு முழுவதிலும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் உபுல் ரோஹன எச்சரித்துள்ளார்.