தற்போது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நடமாட்டத்தடையினை சரியான முறையில் பின்பற்றாவிடின் மேலும் நீடிக்கப்படவேண்டியேற்படும் என்று இலங்கை அரச வைத்திய அதிகாரகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வௌியிட்ட அச்சங்கத்தின ஊடக பேச்சாளர் டொக்டர் சமந்த ஆனந்த இவ்வாறு கூறியுள்ளார்.
தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முடக்கத்தை சரியான முறையில் செயற்படுத்த மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சரியான முறையில் ஒத்துழைப்பு வழங்கப்படாவிடின் முடக்கம் நீடிக்கப்படவேண்டியேற்படும். அல்லது இன்னும் ஒரு மாதத்தில் மீண்டும் நாடு முடக்கவேண்டியேற்படும். அப்படியானால் நாட்டை திறப்பதும் மூடுவதுமாக இருப்பது சாத்தியமற்றது. அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் சிரமமான விடயம் ஆகும். எனவே இம்முடக்கத்தை ஏற்றுகொண்டிருப்பவர்களைப் போன்றே செயற்பட்டுக்கொண்டிருப்பவர்களும் நடவடிக்கைகளை சரியான முறையில் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.