ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்கங்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கை

ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்கங்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கை

வேதன பிரச்சினை தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய நடவடிக்கை

குறித்து, ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் இன்று கூடி தீர்மானம் மேற்கொள்ள உள்ளது.

வேதன பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறுகோரி, ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள இணையவழி கற்பித்தல் பணிப்புறக்கணிப்பு தொழிற்சங்க நடவடிக்கை இன்று 45 ஆவது நாளாகவும் தொடர்கிறது.
 
ஆசிரியர் - அதிபர் வேதன பிரச்சினை தொடர்பான அமைச்சரவையின் தீர்மானம், அடுத்தவாரம் அறிவிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் டலஸ் அழகப்பெரும நேற்று தெரிவித்திருந்தார்.
 
இந்த நிலையில், இன்று ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கங்கள் கூடி தங்களது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆராய்ந்து அறிவிக்க உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. அமைச்சரவை அதனை அடுத்தவாரத்திற்கு பிற்போட்டுள்ளது. அந்த அறிக்கையில் எங்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய சம்பள உயர்வு இல்லை என அறியக்கூடியதாக உள்ளதாக ஜோசப் ஸ்டாலின் கூறியுள்ளார்.
 
எனவே, இந்த நிலையில், ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கம் என்ற அடிப்படையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பில் இன்று கூடி ஆராய்ந்து அறிவிக்க உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image