நடமாட்டத் தடையை எவ்வளவு காலம் நீடிக்க வேண்டும் - GMOA ஜனாதிபதிக்கு யோசனை

நடமாட்டத் தடையை எவ்வளவு காலம் நீடிக்க வேண்டும் - GMOA ஜனாதிபதிக்கு யோசனை
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு தற்போது அமுலாக்கப்பட்டுள்ள நடமாட்ட கட்டுப்பாட்டை , ஜூன் மாதம் 14ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக மேலும் இரண்டு வாரங்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
 
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் கடிதம் ஒன்றை அனுப்பி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேற்கண்ட விடயத்தை தெரிவித்துள்ளது.
 
அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
 
இதுவரை நடைமுறையில் உள்ள நடமாட்ட கட்டுப்பாடு காரணமாக நோயாளர்கள் பதிவாகும் வீதம் குறைவடைந்து உள்ளமையினால், நடமாட்ட கட்டுப்பாட்டை உடனடியாக நீக்கினால் தொற்றவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
01. வீட்டிலிருந்து வெளியேறும் நபர்களின் எண்ணிக்கையை மேலும் குறைத்து நடமாட்ட கட்டுப்பாட்டை மிகக் கடுமையாக அமுலாக்க வேண்டும்.
 
02. நடமாட்ட கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப்பகுதியில் திறக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் வளாகத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகளின எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
 
03. கொவிட்-19 வீரியத்துடன் பரவும் நாடுகள் மற்றும் மரண வீதத்தை அதிகரிக்கும் தன்மைமிக்க புதிய கொரோனா வைரஸ் திரிப்புகள் அடையாளம் காணப்படும் நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி வழங்கக்கூடாது.
 
04. சமூக மட்டத்தில் கொவிட் பரவல் நிலைமையை அறிந்து கொள்வதற்காக எழுமாறாக மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image