சுதந்திர வர்த்தக வலய பணியாளர்களுக்கு ஜுலை மாதம் தடுப்பூசி ஏற்றம்

சுதந்திர வர்த்தக வலய பணியாளர்களுக்கு ஜுலை மாதம் தடுப்பூசி ஏற்றம்
அனைத்து சுதந்திர வர்த்தக வலய பணியாளர்களுக்கும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் முதலாவது கொவிட்-19 தடுப்பூசி ஏற்றம் இடம்பெறும் என இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
30வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் கொக்கல சுதந்திர வர்த்தக வலய தொழிற்சாலை முதலீட்டாளர்கள் மற்றும் அதன் முகாமைத்துவத்தினருடன் நேற்று (12) சுதந்திர வர்த்தக வலையத்தில் இடம்பெற்ற சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
 
இதன்போது மேலும் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் நாமல் ராஜபக்ச,
 
கடந்த தினம் ஒன்றில் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது சுதந்திர வர்த்தக வலய பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் அவசியம் தொடர்பில்  தெளிவுபடுத்தப்பட்டதன் பின்னர், இலங்கையிலுள்ள அனைத்து சுதந்திர வர்த்தக  நிலையத்திற்கும் தடுப்பூசிகளை வழங்குவதற்கான அனுமதி கிடைத்துள்ளது.
 
இதன்படி கொக்கல சுதந்திர வர்த்தக வளையம் உள்ளிட்ட  ஒவ்வொரு முதலீட்டு வளையத்திற்கு ஜூலை மாதம் முதலாம் வாரத்தில் இருந்து கொவிட்-19 முதலாம் தடுப்பூசி ஏற்றம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 

Author’s Posts