ஊழியர் சேமலாப நிதியம் மற்றும ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றின் நிதியை முதலீடு செய்யப்படுவதனூடாக பெறப்படும் வருமானத்திற்கு 25 வீதம் வரி அறவிடப்படமாட்டாது என்று நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
இன்று (14) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் நீண்ட விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 2000 மில்லியனுக்கும் அதிகமான வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் அறவிடப்படும் 25 வீத மேலதிக வரி ஊழியர் நம்பிக்கை நிதியம், ஊழியர் சேமலாப நிதியம் உள்ளிட்ட 11 நிதியங்களிடம் அறவிடப்படமாட்டாது.
இதன்படி, வருடாந்தம் 2000 மில்லியன் வருமானம் பெருவோருக்கு மட்டுமே 25 வீத ஒரு நேர வரி அறவிடப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.