காலி மாவட்டத்தின் ரத்தகம பொலிஸ் பிரிவில் உள்ள இம்புல்கொட மற்றும் கட்டுதம்பே ஆகிய கிராமசேவகர் பிரிவு இன்றிறவு 8.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தப்படவுள்ளது என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
ஏற்கனவே 3 மாவட்டங்களில் 8 கிராம சேவகர் பிரிவுகள் இன்றிறவு 8.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
நாட்டில் கொவிட் 19 பரவல் அதிகரித்துள்ளமை தடுக்கும் வகையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள்
காலி மாவட்டம் - ரத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரிவில் இம்புல்கொட, கட்டுதம்பே -
கம்பஹா மாவட்டம் - கொட்டதெனியாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஹேன, ஹீரலுகெதர மற்றும் கலுவகல்ல மற்றும் மினுவங்கொட பொலிஸ் பிரிவில் அஸசவென்னாவத்த கிழக்கு கிராம சேவகர் பிரிவுகள்
களுத்துறை மாவட்டம் - மீரகஹதென்ன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிரிஸ்வத்த, பெலவத்த வடக்கு மற்றும் பெலவத்த கிழக்கு கிராம சேவகர் பிரிவுகள்.
திருகோணமலை மாவட்டம் - திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூம்புஹார் கிராம சேவகர் பிரிவு
அத்துடன் தம்புள்ள பொருளாதார மத்திய நிலையம் எதிர்வரும் 2 வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.