மேல் மாகாணம் மற்றும் வட மேல் மாகாண பாடசாலைகளை எதிர்வரும 30ம் திகதி வரை விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் ஜி. எல் பீரி்ஸ் அறிவித்துள்ளார்.
நாட்டில் கொவிட் பரவல் மிக வேகமாக அதிகரித்துள்ளமையை கருத்திற்கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுத என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, அனைத்து அரச, தனியார் பாடசாலைகள் மற்றும் பாலர் பாடசாலைகள் எதிர்வரும் 30ம் திகதி வரையில் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அனைத்து பெற்றோர்களும் மாணவர்களும் சுகாதார வழிமுறைகளை தவறாமல் பின்பற்றுமாறும் கல்வியமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, அரச அறிவித்தலுக்கமைய அனைத்து வடக்கு மற்றும் மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க பாடசாகைலளும் எதிர்வரும் 30ம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என்று ஆயர் இல்லம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.