சம்பளத்தை 75 வீதத்தால் அதிகரிக்காவிடின் பாரிய தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று இலங்கை பெருந்தோட்டத்துறை ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சம்பள அதிகரிப்பு தொடர்பில் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் பல கலந்துரையாடல் சுற்றுகள் நடத்தப்பட்டதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த CESU தலைவர் நிஷாந்த வன்னியாராச்சி தெரிவித்தார்.
தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் கூட்டு ஒப்பந்தத்தை புதுப்பித்ததன் மூலம் சமீபத்திய சம்பள திருத்தம் செய்யப்பட்டது. எங்களுடைய தற்போதைய கூட்டு ஒப்பந்தம் செப்டம்பர் 30 ஆம் திகதி முடிவடையும். புதிய கூட்டு ஒப்பந்தம் ஒக்டோபர் முதலாம் திகதி கையெழுத்திடப்பட வேண்டும். இந்த ஒப்பந்தம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு (2022-2025) செல்லுபடியாகும்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, CESU விளக்கிய சிரமங்களை ஏற்றுக்கொள்ளத்தக்கது என்று சம்மேளனம் ஏற்றுக்கொண்டுள்ளது. EEA ஏற்றுக்கொண்டது. தங்களுக்கு எரிபொருள் கொடுப்பனவுகள், போதிய போக்குவரத்து வசதிகள் இன்மை என்பவற்றுடன் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு என்பவற்றை கருத்திற்கொண்டு 70 வீதம் சம்பள உயர்வு கோரப்படுவதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும் சம்மேளனம் அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. ஆனால் பல பெருந்தோட்டக் கம்பனிகள் உயர் லாபத்தை பெறுவதை ஏற்றுக்கொள்வதாகவும் சம்மேளனம் ஏற்றுக்கொண்டுள்ளது. பல பெருந்தோட்டக் கம்பனிகள் தமது உண்மையான லாப நட்டத்தைக் கூறுவதில்லை. தாங்கள் நஷ்டம் அடைகிறோம் என்பதைக் காட்ட சில அளவுகோல்களைச் சேர்த்து உண்மையான லாபத்தை மறைத்து வந்தனர்.
முதல் கலந்துரையாடலின் போது, மூன்று முறை (மூன்று ஆண்டுகளுக்கு) 24% சம்பள உயர்வை வழங்க சம்மேளனம் ஒப்புக்கொண்டது. நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இரண்டாவது கலந்துரையாடலின் போது, 25% சம்பள உயர்வை வழங்க ஒப்புக்கொண்டது, நாங்கள் அதை ஏற்கவில்லை. பின்னர், 60% மற்றும் 50% சம்பள உயர்வு கோரினோம். ஆனால், சம்மேளனம் ஒப்புக்கொள்ளவில்லை" என்றும் வன்னியாராச்சி கூறினார்.
எனவே, அடுத்த வாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி 70% சம்பள உயர்வை EEA வழங்காவிட்டால், நாடு தழுவிய தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்ததாக CESU தெரிவித்துள்ளது.
மேலும், பெருந்தோட்டத் துறையின் உற்பத்திக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தாமல் இந்தப் பிரச்சினையை ஆராயுமாறு சங்கம் சம்மேளனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.