22 ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்த உயர்நீதிமன்றின் வியாக்கியானம் அறிவிப்பு

22 ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்த உயர்நீதிமன்றின் வியாக்கியானம் அறிவிப்பு

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்த உயர்நீதிமன்றின் வியாக்கியானத்தை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, நாடாளுமன்றில் இன்று அறிவித்தார்.

22 ஆவது திருச்சட்டமூலத்தில் அடங்கியுள்ள சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணான உள்ளதென உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அவற்றை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றில் விசேட பெரும்பான்மை அல்லது சர்வஜன வாக்கெடுப்பு வேண்டுமென உயர் நீதிமன்றம் தமது வியாக்கியானத்தில் அறிவித்துள்ளதாக சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

மேற்படி, சரத்துகள் திருத்தப்பட்டால் பொது வாக்கெடுப்பு இல்லாமலேயே நாடாளுமன்றில் சாதரண பெரும்பான்மையுடன் திருத்தத்தை நிறைவேற்ற முடியுமென உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image