கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் நாட்டில் கொவிட் 19 தொற்று நேர்மறை வீதம் இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த டொக்டர் ஹரித் அளுத்கே கருத்து தெரிவிக்கையில் நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 வீதத்தால் அதிகரித்துள்ளது. ஜனவரி மாதம் 3 வீத அதிகரிப்பு காணப்பட்டது. இம்மாதத்தில் இருமடங்கு அதிகரிப்பு காணப்படுகின்றமை ஆபத்தானது. கடந்த சில நாட்களாக தொற்றாளர்கள் எண்ணிக்கை மேல் மாகாணம் மற்றும் வௌி மாகாணங்களில் அதிகரித்துள்ளமை காணக்கூடியதாக உள்ளது.
எது எவ்வாறு இருப்பினும் நாம் வௌி மாவட்டங்களில் தொற்று பரவுவதை தடுப்பதில் நாம் தோல்வியடைந்துள்ளோம். எமது தோல்வியை அடையாளங்கண்டு அதனை தடுப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுளளார்.