53,000 பட்டதாரிகளுக்கும் ஜனவரியில் நிரந்தர நியமனம்: மேலதிக நிதியும் ஒதுக்கீடு

53,000 பட்டதாரிகளுக்கும் ஜனவரியில் நிரந்தர நியமனம்: மேலதிக நிதியும் ஒதுக்கீடு

தற்பொழுது பயிலுநராக அரசாங்க சேவைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்ட 53,000 இற்கு அதிக பட்டதாரிகளுக்கு 2022 ஜனவரி மாதம் முதல் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பெஸில் ராஜபக்ஷ, வரவு-செலவுத் திட்ட உரையில் தெரிவித்தார்.

இது தொடர்பில் நிதி அமைச்சர் வரவு- செலவுத் திட்ட உரையில் தெரிவிக்கையில்,

அதற்காக ரூபா 27,600 மில்லியன் செலவாகுமென எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை, குறித்த முழுத் தொகையினையும் இவ் வரவுசெலவுத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், தற்பொழுது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூபா 20,000 மில்லியனுக்கு மேலதிகமாக மேலும் ரூபா 7,600 மில்லியன் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. – என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image