• அரசாங்க அலுவலகங்களுக்கான புதிய கட்டுமானப் பணிகள் 2 வருடங்களுக்கு பிற்போடப்படும்.
• அரச நிறுவனங்களின் தொலைபேசிச் செலவுகள் 25 வீதத்தால் குறைக்கப்படும். சூரிய சக்தியை தேவைக்கேற்ப பயன்படுத்துவதற்கான பிரேரணை முன்னெடுக்கப்படும்
• அரச ஊழியர்களின் ஓய்வூதிய சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்காக 500 மில்லியன் ரூபா நிதி
• அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லை 65 வயது வரை நீடிக்கப்படும்.
• நாட்டில் வயதானவர்களின் எண்ணிக்கையை கருத்திற்கொண்டு ஓய்வு ஓதியம் பெறாதவர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு முறையொன்று நடைமுறைப்படுத்தப்படும். இதற்காக அரசாங்கம் ஆரம்பகட்ட நிதியாக ரூபா 100 மில்லியனைவழங்க உள்ளது.
• முச்சக்கரவண்டி துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பு கிடைக்கின்றது. இத் துறையில் சுமார் 7 இலட்சம் முச்சக்கரவண்டிகள் நாட்டில் செயல்படுகின்றன. இவற்றில் பணியாற்றும் சாரதிகளின் நலனுக்காகஅதிகார சபையொன்றும் அமைக்கப்பட உள்ளது.
• கர்ப்பிணி தாய்மார்களுக்கு போஷாக்கு பொதியை 24 மாதங்களுக்கு வழங்குவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது.
• கிராம உத்தியோகத்தர் மட்டத்தில் நிவாரணத்தை வழங்குவதற்கு 15,000 மில்லியன் ரூபா நிதி.
• மனைபொருளாதார வேலைத்திட்டத்திற்காக 31,000 மில்லின் ரூபா நிதி ஒதுக்கீடு.
• அரச சேவையை 'டிஜிற்றல்' மயப்படுத்துவதற்கென தற்பொழுது ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கு மேலதிகமாக மேலும் 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பப்டும்.
• தொலைத்தொடர்பு அனுமதிப்பத்திரம் ,நிறுவனங்களுக்கு பொது ஏலவிற்பனை மூலம் வழங்கப்படும்.
• விபத்துக்களை ஏற்படுத்தும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்கு எதிராக தண்டப்பணம் அறவிடப்படும்.
.•ஆயுர்வேத மற்றும் சுதேச மருத்துவ முறைகள் ஊக்குவிக்கப்படவிருக்கின்றன. ஆயுர்வேத சிகிச்சை மத்திய நிலையங்களும் புதிதாக ஸ்தாபிக்கப்படவுள்ளன.
•இலங்கையில் விசேட தேவையுடையவர்களுக்கான உரிமைகள் சட்டமூலமொன்று அறிமுகப்படுத்தப்படும். அவர்களின் தொழில்முனைவை உயர்த்துவதற்கான வேலைத்திட்டங்களும் தயாரிக்கப்படும்.
• குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் பிரச்சினைகளுக்கும் விசேட வேலைத்திட்டம் செயல்படுத்தப்படும்.
• சர்வதேச சந்தையை இலக்காக கொண்டு இலங்கையில் உயர்தர மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
•நீதிமன்ற நடவடிக்கைகளை வினைத்திறனான முறையில் முன்னெடுப்பதற்காக 5 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது.
• பௌத்த விஹாரைகளையும், வழிபாட்டுத் தலங்களையும் அபிவிருத்தி செய்ய 500 மில்லியன் ரூபா நிதி
• 'ஆயிரம் தேசிய பாடசாலை' என்ற வேலைத்திட்டம் எதிர்வரும் 3 ஆண்டுகளில் துரிதப்படுத்தப்படவுள்ளது. இதற்கென 5,300 மில்லியன் ரூபா கூடுதலாக ஒதுக்கப்படவுள்ளது.
• விளையாட்டு வசதிகளை மேம்படுத்துவதற்காக 3 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி
வரவு-செலவுத் திட்ட முழுமையான உரையை பார்க்க கீழுள்ள இணைப்பை அழுத்துக
வரவு-செலவுத் திட்ட முழுமையான உரை