ஆசிரியர் - அதிபர் சம்பள அதிகரிப்புக்கு பட்ஜட்டில் 30,000 மில்லியன் ரூபா

ஆசிரியர் - அதிபர் சம்பள அதிகரிப்புக்கு பட்ஜட்டில் 30,000 மில்லியன் ரூபா

அதிபர்கள், ஆசியர்களின் சம்பள முரண்பாடை தீர்பதற்காக, 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 30,000 மில்லின் ரூபா ஒதுக்கீட்டுக்கான முன்மொழிவை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அறிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (12) வரவு செலவு திட்டத்தை சமர்பித்து உரையாற்றியபோது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் நிதி அமைச்சர் வரவு- செலவுத் திட்ட உரையில் தெரிவிக்கையில்,

ஆசிரியர் - அதிபர் சேவைகளின் சம்பள முரண்பாட்டினை நீக்குமாறு கோரி ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவந்து அரசாங்கத்தின் மூலம் கொள்கை அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 2021.8.30 ஆந் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்தினை விரைவாக செயற்படுத்துவதற்காக மேலும் ரூபா 30,000 மில்லியனை சம்பளமாக உட்சேர்ப்பதற்கு முன்மொழியப்படுகின்றது.

இது ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பளம் தொடர்பாக தற்பொழுது செலவிடப்படுகின்ற ரூபா 109,000 மில்லியனுக்கு அதிக தொகையினைவிட மேலதிக ஒதுக்கீடாகும். – என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image