51,000 பட்டதாரிகளுக்கு எவ்வாறு நிரந்தர நியமனம் வழங்கப்படும்? அமைச்சர் விளக்கம்

51,000 பட்டதாரிகளுக்கு எவ்வாறு நிரந்தர நியமனம் வழங்கப்படும்? அமைச்சர் விளக்கம்

2022 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் 51,000 பட்டதாரிகளுக்கு அரசாங்கத் துறைகளில் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

வேலைவாய்ப்பற்ற 51,000 பட்டதாரிகளுக்கு அரசதுறையில் நிரந்தர நியமனம் வழங்கும் நடவடிக்கைகள் 2022 ஜனவரி 03ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் அதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

அதற்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழுவின் தலைவரான கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இலவசக் கல்வியின் பிரதிபலனாக உயர்கல்வி நிறுவனங்களினூடாக உருவாக்கப்பட்டுள்ள இளைஞர் சமூகத்துக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கை பிரகடனத்துக்கமைய இந்த செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன்படி தற்போது பயிற்சி பெற்று வரும் 51,000 பட்டதாரிகள் அரசாங்கத்தின் அபிவிருத்தி அதிகாரிகளாக 2022ஆம் ஆண்டு ஜனவரி மூன்றாம் திகதியில் குறிப்பிட்ட வேலைத் தளங்களில் இணைததுக்கொள்ளப்படுவதுடன் அன்றைய தினம் அவர்களில் 42 ஆயிரத்து 500 பேரின் தொழில்கள் நிரந்தரமாக்கப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அதேவேளை, 2021ஆம் ஆண்டு பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பயிற்சகளுக்காக இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள் ஒரு வருட காலத்தை நிறைவுசெய்த பின்னர் 2022 ஏப்ரல் முதலாம் திகதி நிரந்தரமாக்கப்படவுள்ளனர். அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்புக்கைள வழங்கும் நோககில் இந்த அமைச்சரவைப் பத்திரத்தை 2020 பெப்ரவரி மாதத்தில் சமர்ப்பித்துள்ளார். நமது நாடு மட்டுமன்றி முழு உலகமும் கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் சூழ்நிiலைய எதிர்கொண்டுள்ளதால் உலக நாடுகள் பொருளாதார நெருக்கடிகைள சந்தித்து வருகின்றன. இவ்வாறான ஒரு சூழ்நிலையிலேயே பட்டதாரிகள் 51,000 பேருக்கு அரசாங்கத் துறையில் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு ஜனாதிபதி முன்னுரிமையளித்துள்ளார்.

அரசாங்கத்தின் இத்தைகய தீர்மானம், இளைஞர்கைள பலப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதியின் தூரநோக்கை முன்னெடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மேற்படி திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தொழில் சட்டங்கள் பற்றிய அறிவூட்டலினால் வடக்கின் தொழிற்சங்கங்கள் ஸ்திரத்தன்மையில்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image