வைத்தியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு

வைத்தியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு

5 மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் இன்று தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதித்துவம் இல்லாமல் சுகாதார அமைச்சினால் 500 வைத்தியர்களுக்கான நியமனப் பட்டியல் வெளியிடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நுவரெலியா, மன்னார், திருகோணமலை, இரத்தினபுரி மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் இன்று காலை முதல் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுக்கப்படுகிறது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image