இன்று முதல் 5000 ரூபா கொடுப்பனவு

இன்று முதல் 5000 ரூபா கொடுப்பனவு

பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் சிரமங்களுக்குள்ளான மக்களின் நலன் கருதி, இன்று (02) முதல் 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.



மூன்று கட்டங்களின் கீழ் 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார்.

5,000 ரூபா பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பப்படிவம் இதோ....

கொரோனா வைரஸ் பயணக் கட்டுப்பாடுகளினால், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மற்றும் தொழிலுக்குச் செல்லாமையால் அன்றாட வருமானத்தை ஈட்டிக்கொள்ள முடியாத குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவை இன்று முதல் வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பயணக் கட்டுப்பாடு, கொரோனா வைரஸ் தொற்றுநிலை, சுகாதார வழிகாட்டல்கள் காரணமாக கடந்த தடவை போன்று மூன்று நாட்களுக்குள் இந்தக் கொடுப்பனவை வழங்கி முடிக்க இயலாது என இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் முதற்கட்டமாக, சமுர்த்திப் பயனாளிகளுக்கு அவர்களின் வங்கிக்கணக்கில் 5000 ரூபா கொடுப்பனவை வைப்பிலிட்டு இந்தத் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கூறியுள்ளார்.

இதேவேளை, X-Press Pearl கப்பலில் ஏற்பட்ட தீ அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பங்களுக்கும் 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

மூலம் - நியூஸ்பெஸ்ட்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image