ஶ்ரீலங்கன் விமானசேவைக்கு 50,000 இந்திய ரூபா அபராதம் விதித்துள்ளது புதுடில்லி நீதிமன்றம்.
ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் அதிகாரிக்கு எதிராக தொடுக்கப்பட்ட பெண் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்கில் இவ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பணியிடத்தில் பெண்களுக்கு எதிராக பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் 2013ம் ஆண்டு சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட மிகக் கூடிய அபராதம் இதுவாகும். நிறுவனத்தின் நடத்தையை கவனத்திற்ககொண்டு நீதிபதி அதிகூடிய அபராத்தை விதித்துள்ளார். இச்சட்டத்தை மீறியமை தொடர்பில் இந்திய நீதிமன்றில் உள்நாட்டு மற்றும் வௌிநாட்டுக்கு எதிராக வழங்கப்பட்ட முதலாவது தண்டனை இதுவாகும்.
இந்நிறுவனத்திற்கு எதிராக நடைபெற்ற மற்றொரு வழக்கில் இலங்கை விமானசேவை நிறுவனத்தின் வலய முகாமையாளரான லலித் டி சில்வா என்பவர் குற்றவாளி என கடந்த செப்டெம்பர் 16ம் திகதி அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்தது. இந்திய பெண்ணொருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தயமை மற்றும் வார்த்தையால் துஷ்பிரயோகம் செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது வைக்கப்பட்டுள்ளன.