ஓய்வூதிய சம்பளம் இல்லாமல் செய்யப்பட்டமைக்கு எதிரான போராட்டம்
ஓய்வூதிய சம்பளம் இல்லாமல் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து கொழும்பில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தன.
2016.01.01 தொடக்கம் 2019.12.31 வரை ஓய்வூதியம் சென்ற 120,000 இக்கு அதிகமான ஓய்வூதியதாரர்களுக்கு 2020.01.01 தொடக்கம் வழங்கப்படவேண்டிய ஓய்வூதிய கொடுப்பனவை தற்போதைய அரசாங்கம் நிறுத்தியமையால் கடந்த வருடம் முழுவதும் ஓய்வூதிய உரிமையை பாதுகாக்கும் தேசிய அமைப்பினால் இதற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதா இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதித் தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
எனினும், அரசாங்கம் இக்கோரிக்கைகளுக்கு சாதகமான எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படமையினால் இதற்கு எதிராக தொழிற்சங்க தலைவர்களால் எதிர்ப்பு மாநாடு நேற்று (20) கொழும்பு விகாரமகாதேவி பூங்காவிற்கு முன்பாக நடைபெற்றது.
இந்த எதிர்ப்பு மாநாட்டில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜெயசிங்க உட்பட பல்வேறுபட்ட தொழிற்சங்கத் தலைவர்களும், ஓய்வூதியக்காரர்களும் கலந்துகொண்டுள்ளனர்.