மேல் மாகாண பாடசாலைகளை மீள திறக்கும் திகதி அறிவிப்பு

மேல் மாகாண பாடசாலைகளை மீள திறக்கும் திகதி அறிவிப்பு

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பரிந்துரைகளுக்கு அமைய எதிர்வரும் பெப்ரவரி

மாதம் 15 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபலி பெரேரா தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான சாத்தியகூறுகள் தொடர்பில் கல்வி அமைச்சில் நேற்று இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் பொதுவான தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்படாத நிலையில், ஒவ்வொரு வலயங்களினதும் பிரிவுகளினதும் சுகாதார நிலைமையினை வௌ;வேறாக ஆராய்ந்து பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் 11 கல்வி வலயங்களில் ஆயிரத்து 576 பாடசாலைகள் உள்ளன. அவற்றில் 79 ஆயிரம் மாணவர்கள் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

இந்த முறை கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்திலுள்ள 907 பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகளை சுகாதார தரப்பினரின் வழிகாட்டல்களுக்கு அமைய ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image