அரசாங்கம் என்பது தொழில் வழங்கும் இடமல்ல என்ற ஜனாதிபதியின் கருத்து சரியா?
அரசாங்கம் என்பது தொழில் வழங்கும் இடமல்ல என்று ஜனாதிபதி கூறியுள்ள கருத்துக்கு கடுமையான கண்டனத்தை வௌியிடுவதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி அதிகாரிகள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கே அரசாங்கத்திற்கு முடியாமல் போயுள்ளது. அரசுக்கு சார்பான எந்தவிதமான தகமைகளும் அற்றவர்களுக்கு எவ்வித மாற்று கருத்துமின்றி தொழில் வழங்குவதில் அரசாங்கம் முன்நிற்பதாகவும் அச்சங்கத்தின் செயலாளர் தம்மிக்க முனசிங்க கருத்து தெரிவித்துள்ளார்.
65,000 பட்டதாரிகளை பயிலுநர் பட்டதாரிகளாக இணைத்துக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி கருத்து வௌியிட்டுள்ளார். எத்தனை பட்டதாரிகளை பயிலுநர்களாக அரசாங்கம் இணைத்து்க்கொண்டுள்ளது என்ற சரியான எண்ணிக்கையை கூறும் நிலையில் கூட ஜனாதிபதி இல்லை. இணைத்துகொண்ட பட்டதாரிகளில் பெரும்பாலானவர்கள் கலைப்பட்டதாரிகள் என்று ஜனாதிபதி கூறுவதன் அர்த்தம் என்னவென்று தெரியவில்லை.
ஏற்கனவே இணைக்கப்பட்ட 53,000 பட்டதாரிகளை நிரந்தர சேவையில் இணைத்துக்கொள்வதில் தாமதங்கள் நிலவுவதனால் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கடந்த 9ம் திகதி போராட்டம் நடத்திய போதும் அரசாங்கம் இன்னும் மௌனம் சாதிக்கிறது. 20,000 ரூபா குறைந்த கொடுப்பனவுடன் சேவையாற்றும் குறித்த பயிலுநர் பட்டதாரிகள் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு பெற்றுகொடுக்கப்படும் என்று ஜனாதிபதி கூறிய போதிலும் அவரும் இப்பிரச்சினையை தவிர்த்து வருகிறார் என்றும் தம்மிக்க முனசிங்க தெரிவித்துள்ளார்.