30 அதிபர் - ஆசிரியர் சங்கங்கள் இணைந்து இன்று கொழும்பில் போராட்டம்

30 அதிபர் - ஆசிரியர் சங்கங்கள் இணைந்து இன்று கொழும்பில் போராட்டம்
ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டைத் தீர்க்குமாறு வலியுறுத்தி இன்று கொழும்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
 
30 அதிபர் ஆசிரியர் சங்கங்கள் ஒன்றிணைந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 10 மணிக்கு இந்த போராட்டம் இடம்பெற உள்ளது.
 
சம்பள முரண்பாட்டை தீர்ப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்ஸுடன் ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் அண்மையில் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது .
 
இந்த நிலையில் அதிபர் - ஆசிரியர் சங்கங்கள் இணைந்து முன்னெடுத்துள்ள இணையவழி கற்பித்தல் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது.
 
இன்று கொழும்பில் போராட்டமும் நடத்தப்பட உள்ளது.
 
இந்தப் போராட்டத்தில் பங்கேற்கும் ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள்....
 
 1. இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் 
 2. இலங்கை ஆசிரியர் சங்கம்
 3. அதிபர் சேவை சங்கம்
 4. அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம்
 5. சுயாதீன இலங்கை ஆசிரியர் சங்கம்
 6. இலங்கை தேசிய அதிபர் சங்கம் 
 7. அகில இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சங்கம்
 8. இலங்கை முன்னேற்ற ஆசிரியர் சங்கம்
 9. தரப்படுத்தப்பட்ட அதிபர் சங்கங்களின் ஒன்றியம்
 10. சுயாதீன கல்வி சேவை சங்கம்
 11. பயிற்சி கல்வியற்கல்லூரி மற்றும் பட்டதாரி ஆசிரியர் சங்கம்
 12. தரப்படுத்தப்பட்ட அதிபர் சேவை சங்கம்
 13. இலங்கை பிரிவென ஆசிரியர் சேவை சங்கம்
 14. இலங்கை தொழில்முறை அதிபர்கள் சங்கம் 
 15. கத்தோலிக்க ஆசிரியர் சங்கம்
 16. அகில இலங்கை தரப்படுத்தப்பட்ட அதிபர்கள் முன்னணி
 17. மலையக ஆசிரியர் முன்னணி
 18. தேசிய அதிபர் ஒன்றியம்
 19. ஆசிரியர் விடுதலை முன்னணி
 20. தென்மாகாண தரப்படுத்தப்பட்ட அதிபர்கள் சங்கம்
 21. இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கம்
 22. சுயாதீன தரப்படுத்தப்பட்ட அதிபர்கள் ஒன்றியம்
 23. இலங்கை கல்வி சேவை சம்மேளனம்
 24. ஒன்றிணைந்த ஆசிரியர் சேவை சங்கம்
 25. பெருந்தோட்ட ஆசிரியர் சங்கம்
 26. தேசிய ஆசிரியர் சபை
 27. இலங்கை இஸ்லாம் ஆசிரியர்கள் சங்கம்
 28. ஐக்கிய தமிழர் ஆசிரியர் சங்கம்
 29. இலங்கை தேசிய ஆசிரியர் சங்கம்
 30. இலங்கை வீட்டு மற்றும் விவசாய ஆசிரியர் சங்கம்
 

Author’s Posts