உரிமைகளை வென்றெடுக்க தலைநகரில் அணிதிரண்ட ஆசிரியர் - அதிபர் சங்கங்கள்
அதிபர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை மீளப்பெறல் மற்றும் சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று கொழும்பில் பாரிய போராட்டத்தில் ஈடுபட்டன.
30 அதிபர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் ஒன்றிணைந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இன்று காலை முற்பகல் 10 மணியளவில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதையடுத்து பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள் ஜனாதிபதி காரியாலயத்தில் நோக்கி சென்றனர்.
சம்பள முரண்பாட்டை தீர்ப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்ஸுடன் ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் அண்மையில் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது .
இந்த நிலையில் அதிபர் - ஆசிரியர் சங்கங்கள் இணைந்து முன்னெடுத்துள்ள இணையவழி கற்பித்தல் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது.
இன்று கொழும்பில் போராட்டமும் நடத்தப்பட்டது.