3 நாட்களுக்கு மின்தடை அமுலாகும் முறைமை அறிவிப்பு

3 நாட்களுக்கு மின்தடை அமுலாகும் முறைமை அறிவிப்பு

இன்று முதல் மூன்று நாட்களில் (25,26,27) மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த மூன்று நாட்களில் (25,26,27) நாடளாவிய ரீதியில் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன்படி, குறித்த மூன்று நாட்களிலும் A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு காலை 9.30 மணி முதல் 5.30 மணி வரையான காலப்பகுதியில் 2 மணிநேரம் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

குறித்த வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை 5.30 மணிமுதல் இரவு 9.30 மணிவரையான காலப்பகுதியினுள் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்

ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கங்கள் இன்று நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு

2021 ஆம் ஆண்டுக்கான உயர்தர செய்முறை பரீட்சைகள் தொடர்பான அறிவித்தல்

காலிமுகத்திடல் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் தொழிற்சங்கங்களின் கரங்கள்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image