ஆசிரியர் - அதிபர் சம்பள உயர்வு: அவதானம் செலுத்தப்படும் 3 விடயங்கள்

ஆசிரியர் - அதிபர் சம்பள உயர்வு: அவதானம் செலுத்தப்படும் 3 விடயங்கள்
ஆசிரியர் - அதிபர் சம்பள உயர்வு குறித்து முக்கியமான 3 விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
 
ஆசிரியர்-அதிபர் தொழிற் சங்கக் கூட்டணி மற்றும் சம்பள ஆணைக்குழுவிற்கு இடையில் கலந்துரையாடப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்
 
சம்பள ஆணைக்குழுவின் அழைப்பாணையின்படி, 2022 /09/20  காலை.  09.00 மணியளவில் ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கக் கூட்டணி மற்றும் ஆணைக்குழுப் பிரதிநிதிகளுக்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், பின்வரும் விடயங்கள்  
 
 01. 1997 ஆம் ஆண்டு முதல், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கான சம்பள முரண்பாடுகள் குறித்து இதுவரை எந்தவொரு சம்பள ஆணைக்குழுவும் நியாயமான தீர்வினை வழங்கத் தவறியிருக்கின்றமை.
 
 02. அதனால்தான் ஆசிரியர் அதிபர் சங்கக் கூட்டமைப்பானது 1/3 பகுதி சம்பள அதிகரிப்பை தொழிற்சங்கப் போராட்டத்தின் மூலம் வென்றெடுக்க வேண்டியிருந்தது மற்றும் எஞ்சிய மீதிச் சம்பள முரண்பாடுகளை நீக்குவது தொடர்பான பரிந்துரைகளைச் சம்பள ஆணைக்குழுவினால் கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைத்தல்.
 
 03. இதுவரை சகல மக்களுக்கும் வாழ்க்கைச் செலவு மற்றும் போக்குவரத்து செலவுகள்  தாங்கிக்கொள்ள முடியாத அளவு அதிகரித்திருப்பதுடன் தொழில் புரியும் சகல மக்களுக்கும் முறையான கொடுப்பனவை வழங்குவதற்கு ஆணைக்குழுவின் பரிந்துரையைப் பெற்றுக் கொடுத்தல்.
 
இவ் விடயங்கள் தொடர்பாக  கூட்டணியின் பிரதிநிதிகள் விரிவான விடயங்களை முன்வைத்ததுடன், எதிர்காலத்தில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப சம்பளம் அல்லது கொடுப்பனவுகளை வென்றெடுக்க பொருத்தமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்பதையும் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். என ஆசிரியர்-அதிபர் தொழிற் சங்கக் கூட்டணி தெரிவித்துள்ளது..
 
மேலும் செய்திகள்
 
 
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image