24 மணிநேர மருத்துவ சேவைகள் வழங்குவதில் சிக்கல் - நிறைவுகாண் மருத்துவ தொழில்வல்லுநர் ஒன்றியம் -

24 மணிநேர மருத்துவ சேவைகள் வழங்குவதில் சிக்கல் - நிறைவுகாண் மருத்துவ தொழில்வல்லுநர் ஒன்றியம் -

நாட்டில் நிலவும் எரிபொருள் பற்றாக்குறை மற்றும் சமாளிக்க முடியாத பொருள் விலையேற்றம் என்பவற்றின் காரணமாக வைத்தியசாலைகளில் 24 மணி நேர சேவையை வழங்குவதில் பெரும் பிரச்சினை தோன்றியுள்ளது என்று நிறைவுகாண் மருத்துவ தொழில்வல்லுநர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

குறித்த பிரச்சினைக்கு நடைமுறை சாத்தியமான தீர்வினை பெற்றுக்கொடுக்க பொறுப்புக்கூறவேண்டிய எந்த தரப்பினரும் முன்வராமையினால் எதிர்காலத்தில் சுகாதாரசேவை தானாக நின்றுபோகும் நிலை தோன்றியுள்ளதாக அவ்வொன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த விடயங்களை சுட்டிக்காட்டி தீர்வை பெற்றுத்தருமாறு சுகாதார அமைச்சின் செயலாளருக்கு நிறைவுகாண் மருத்துவ தொழில்வல்லுநர் ஒன்றியம் கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தற்போது நாட்டில் நிலவும் போக்குவரத்து பிரச்சினைகளுக்கு மேலதிகமாக மேலதிக கொடுப்பனவு வழங்கும் சேவைகளை மட்டுப்படுத்துவதனூடாக 24 மணிநேர சுகாதார சேவையை தொடர்ச்சியான வழங்குதல்

சுகாதார சேவையானது 24 மணிநேர கட்டாய சேவையாக அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும் நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலைமையானது 24 மணிநேர சேவையை முன்னெடுப்பதில் நடைமுறைரீதியான பல பிரச்சினைகளை எதிர்நோக்கவேண்டியுள்ளது. குறிப்பாக பொறுப்புக்கூறவேண்டிய தரப்பினர் பொறுப்பெடுக்க முன்வராமையினால் எதிர்காலத்தில் சுகாதாரசேவை கடுமையாக பாதிக்கப்படும் நிலை தோன்றியுள்ளது.

குறிப்பாக பணிமுறைக்கு போதுமான ஊழியர்கள் இல்லாமையினால் 8 மணிநேர சேவையை செயற்படுத்துவதற்கு மாத்திரம் போதுமான ஊழியர்களை கொண்டு 24 மணிநேர சேவையை வழங்குவதனூடாக பொதுவான சேவைநேரத்தை விடவும் இரண்டு மடங்கு நேரம் சேவை வழங்கவேண்டிய கட்டாய நிலை தோன்றியுள்ளது. உத்தியோகப்பூர்வ இல்லம், வாகனம், போக்குவரத்து வசதி அல்லது மேலதிக நேரத்திற்கான கொடுப்பனவு வழங்காமையினால் நிறைவுகாண் வைத்தியசேவைக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்தில் உள்ள நடைமுறைச்சாத்தியமான பிரச்சினைகள் காரணமாகளை பெமது சொந்த வாகனங்களைப் பயன்படுத்தி சேவைக்கு வர முயன்றாலும் அவசியமான எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் உள்ள பிரச்சினை, தமது வருமானத்திற்கும் அதிகமான போக்குவரத்து செலவினை தாக்குபிடிக்க முடியாமை மற்றும் லாபமான மாற்றுவழிகளை கையாள முடியாமை என்பன காரணமாக அவர்கள் தொடர்ச்சியாக பணிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

1. தேவையான சேவைக்கு வழங்கப்படும் மேலதிக சேவைக்கான கொடுப்பனவை எவ்வித மட்டுப்படுத்தலுமின்றி வழங்கல்

2. பணிக்கு சமூகமளிக்கும் தினத்தில் மேற்கொள்ளும் சேவையை இரண்டு மடங்காக பெற்றுக்கொள்ளல் மற்றும் மேலதிக கொடுப்பனவை மட்டுப்படுத்தும் வகையில் நாளாந்த கடமைக்கு சமூகமளிக்கும் ஊழியர்களுக்கு வாரத்திற்கு 2 அல்லது 3 நாட்கள் விடுமுறை வழங்கல்.

3. விசேட விடுமுறை வழங்கப்படும் சந்தர்ப்பங்களில் ஊழியர்கள் விடுமுறை கொடுப்பனவு மற்றும் வார இறுதி சேவைக்கொடுப்பனவுக்காக அதற்கு முதல் நாள் கடமைக்கு சமூகமளிப்பது கட்டாயமானது என்று கூறப்படுவதனால் சில சந்தர்ப்பங்களில் அத்தியவசியமற்ற ஊழியர்களும் சேவைக்கு அழைக்க வேண்டிய நிலை தோன்றியுள்ளமையினால் விசேட விடுமுறை வழங்கப்படும் நேரங்களில் குறித்த தீ்ர்மானத்தை செயலற்றதாக்குதல்.

 

மேற்கூறப்பட்ட முன்மொழிவுகள் செயற்படுத்தப்படாவிடின் நாட்டில் தற்போது நிலவும் நிலைமை காரணமாக பணிக்கு சமூகமளிக்க முடியாது போகும் எதிர்பாராத சந்தர்ப்பங்களில் அதனை அவ்வவ்வதிகாரிகளின் மீது திணித்தல், ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தல், விடுமுறையை மட்டுப்படுத்தல் என்பவற்றை செயற்படுத்தவேண்டாம் என்று மிக அவதானத்துடன் சுட்டிக்காட்டுகிறோம் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image