அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படக்கூடாது! கைதுகளை உடன் நிறுத்த வேண்டும் - தொழிற்சங்கங்கள்
தொடர்ச்சியாக இடம்பெறும் கைதுகள் மற்றும் அரச உத்தியோகத்தர்களை சேவைக்கு அழைக்காமல், அவர்களை வீடுகளில் இருந்து பணியாற்றுமாறு கூறி முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ள சம்பள குறைப்பு தொடர்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் கருத்து தெரிவித்துள்ளது.
தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் கொழும்பில் கடந்த 20ஆம் திகதி நடத்திய ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
ஐ.நா அலுவலகத்தில் தொழிற்சங்க - வெகுஜன அமைப்புகளின் பிரதிநிதிகள் கடிதம் கையளிப்பு!
கேஸ் விநியோக தகவல்களை விரைவில் பெற்றுக்கொள்ள விசேட செயலி
பரீட்சார்த்திகள் - பணிக்குழாமினர் பரீட்சை மண்டபங்களுக்கு செல்ல விசேட நடவடிக்கை!
கடந்த 9ஆம் திகதி கோட்டா கோ கம யில் அமைதியான முறையில் நடத்தப்படும் போராட்டத்தின் மீது அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள நிலைமையுடன், சந்தேக நபர்களாக குறிப்பிட்டு இதுவரையில் தொடர்ச்சியாக பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
தாக்குதல் நடத்தப்பட்ட அன்று, தாக்குதல் நடத்தியவர்கள் மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் கூடியிருந்ததுடன் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ 2 மற்றும் சனத் நிஷாந்த ஆகியோர் இதற்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்களாவர். எனினும் அவர்கள் சுதந்திரமாக இருக்கின்ற சந்தர்ப்பத்தில், நாடு முழுவதும் இடம்பெறுகின்ற கைதுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என தொழிற்சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் களுத்துறை பொலிஸ் நிலையத்தினால் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொருளாளரை கைது செய்வதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
அதேநேரம், அத்தியாவசிய அரச ஊழியர்கள் தவிர்ந்த ஏனைய அரச ஊழியர்களை இன்று (20) முதல் வீடுகளிலிருந்து பணியாற்றுமாறு அழைப்பதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள பிரச்சினை தொடர்பில் இந்த ஊடக சந்திப்பில் தம்மிக்க முனசிங்க மற்றும் சஞ்ஜீவ பண்டார ஆகியோர் கருத்து தெரிவித்திருந்தனர்.
இதனூடாக எதிர்காலத்தில் அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் மற்றும் தொழில் பாதுகாப்பு என்பன தொடர்பில் பிரச்சினை ஏற்படும் என அவர்கள் கூறுகின்றனர்.