23 மாதங்களாக நிரந்தர நியமனம் வழங்கப்படாத பயிலுனர்கள் தொடர்பான முடிவு

23 மாதங்களாக நிரந்தர நியமனம் வழங்கப்படாத பயிலுனர்கள் தொடர்பான முடிவு

ஆட்சேர்க்கப்பட்டு 23 மாதங்களாக நிரந்தர நியமனம் வழங்கப்படாத பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரட்ணசிறி மற்றும் இணைந்த சேவைகள் பணிப்பாளர் ஆலோக பண்டார ஆகியோரை, ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் அண்மையில் சந்தித்துள்ளது.

உரிமைகளை வென்றெடுக்க தலைநகரில் அணிதிரண்ட ஆசிரியர் - அதிபர் சங்கங்கள்

இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள சங்கத்தின் பொதுச் செயலாளர் தம்மிக்க முனசிங்க,

இதன்போது பல்வேறு விடயங்களை நாங்கள் முன்வைத்தோம். முதலாவதாக 2019ஆம் ஆண்டு ஆட்சேர்க்கப்பட்டு தற்போது 23 மாதங்களாக நிரந்தர நியமனம் வழங்கப்படாமல் மாகாண அரசாங்கத்தின் கீழ் ஆட்சேர்க்கப்பட்ட பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் நாங்கள் கோரிக்கை முன்வைத்தோம்.

தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் பயிலுனர்கள் தற்போது பயிற்சி பயிலுனர்களாக இருக்கின்றனர்.

23 மாதங்களாக அவர்கள் இவ்வாறு இருக்கின்றனர். அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு தலையீடு செய்யுமாறு நாங்கள் அமைச்சின் செயலாளரிடம் கேட்டுக்கொண்டோம்.

இதன்போது குறிப்பு ஒன்றை பதிவு செய்த செயலாளர், அனைத்து செயலாளர்களுக்கும் அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார் என ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தம்மிக்க முனசிங்க தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image