பல அரச நிறுவனங்களின் தரவுக் கட்டமைப்புகள் செயலிழந்த நிலையில்

பல அரச நிறுவனங்களின் தரவுக் கட்டமைப்புகள் செயலிழந்த நிலையில்

உள்நாட்டு இறைவரி திணைக்களம் உட்பட சுமார் இருபது அரச நிறுவனங்களில் கோடிக்கணக்கான ரூபா செலவில் நிறுவப்பட்ட தரவு கட்டமைப்புகள் தற்போது செயலிழந்த நிலையில் உள்ளதாக கணக்காய்வு அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள அரசாங்கக் கணக்குகளுக்கான பாராளுமன்றக் குழுவின் (கோபா குழு) தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அகியவன்ன, 1700 கோடி ரூபாயில் நிறுவப்பட்ட உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தரவு அமைப்பும் செயற்படவில்லை என்று கூறியுள்ளார்.

பல அரச நிறுவனங்களின் தரவு அமைப்புகள் இயங்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க நிறுவனத்தை வினைத்திறனுள்ளதாக்கி வருவாயை அதிகரிப்பதற்கு டிஜிட்டல் மயமாக்கல் மிகவும் முக்கியமானது. எனினும் அதனை உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும் அழகியவண்ண சுட்டிக்காட்டினார்.

பல நிறுவனங்களில் தரவு அமைப்புகள் செயலிழந்ததன் காரணமாக பொதுச் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வு அறிக்கைகள் காட்டுகின்றன.

மூலம் - லங்காதீப

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image