பெண் உரிமைகளை பாதுகாக்கும் புதிய சட்ட மூலங்கள் மே மாதம் பாராளுமன்றத்தில்
இன்று நாட்டில் பெரும்பான்மையான மக்கள் பெண்களாக இருந்தாலும், தொழில் செய்யும் பெண்களின் பிரதிநிதித்துவம் போதுமானதாக இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எனவே, பெண்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் இரண்டு புதிய சட்ட மூலங்களைக் கொண்டு வருகிறோம். இவை அனைத்தும் மே மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
அதன் மூலம் நாட்டில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்க்கின்றோம். அந்த மாற்றத்திற்காக எங்களுடன் இணைய உங்களை அழைக்கிறேன்.
கண்டி ஜனாதிபதி மாளிகையில் நேற்று முன்தினம் (07) இடம்பெற்ற “என்னில் இருந்து ஆரம்பிப்போம்” கண்டி மாவட்ட இளைஞர் மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி தெரிவித்தார்.