எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையான நீண்ட விடுமுறைக்கு அமைய அரச ஊழியர்களது கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பான அறிவிப்பை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது.
அனைத்து மாவட்ட செயலாளர் கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் உள்ளூராட்சி சபையில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகளுக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அக்காலப்பகுதியில் அனைத்து பிரதேச செயலாளர்கள் உட்பட மாவட்டத்தின் அனைத்து அரச உத்தியோகத்தர்களும் அரச நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து தேவையான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.