உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமுலம் நேற்று நீதியமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த சட்டவரைவு திருத்தப்பட வேண்டும் அல்லது மீளப் பெறப்பட வேண்டும் என தொழிற்சங்கத் தலைவர்கள், அரசியல்வாதிகள்,. சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
குறித்த சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் இலங்கை அரசியலைப்பின் படி காணப்படும் மனித உரிமைகளை மீறுவதாக அமைந்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.